இலங்கை
		
	
	
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது -சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம்


வி.சுகிர்தகுமார்
  சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக இன்று ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் இச்செய்தி தொடர்பில் தமது கண்டனத்தை தெரிவிப்பதாகவும் சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
					இச்செயற்பாடானது தங்களது நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அலுவலக கடமைநேரம் தவிர்ந்து நேரங்களில் தமக்கு அரசியலில் ஈடுபடமுடியும் என அறிந்துள்ள போதிலும் தாம் அவ்வாறு எந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எந்தவொரு வேட்பாளருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் வாக்களிக்குமாறு தமது சங்கத்தை சார்ந்த எந்த ஒரு உத்தியோகத்தரும் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டது.
சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து மொட்டு கட்சியில் போட்டியிடும் றிஸ்லி முஸ்தபா பிரதமரை சந்தித்தபோது எமது உத்தியோகத்தர்கள் முன்னாள் பிரதேச செயலாளர் சலீமுக்கு ஆதரவாக செயற்படுவதாக பொய்யான தகவலை வழங்கியுள்ளார். இது தொடர்பில் தமது சங்கம் வண்மையாக கண்டிப்பதாகவும் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
				
					


