ஆலம் விழுதுகள் அமைப்பினர் 1200 புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான செயலட்டைகளை வழங்கி வைத்தனர்.

வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்ட ஆலம் விழுதுகள் அமைப்பினர் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட 1200 புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான செயலட்டைகளை வழங்கி (09)வைத்தனர்.
அம்பாரை மாவட்ட ஆலம் விழுகள் அமைப்பின் இணைப்பாளரும் உதவிக்கல்விப்பணிப்பாளருமான சு.ஸ்ரீதரன் தலைமையில் கல்வி வலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் கலந்து கொண்டு செயலட்டைகளை அதிபர்களிடம் வழங்கி வைத்தார்.
ஆலம் விழுதுகள் அமைப்பானது அம்பாரை மாவட்டம் முழுவதிலும் பசுமைப்புரட்சி திட்டம் மற்றும் வாழ்வாதாரம், கல்வி செயற்றிட்டம் என பல்வேறு திட்டங்களை காத்திரமான முறையில் மேற்கொண்டு வருகின்றது.
இதற்கமைவாக மாவட்டத்தில் உள்ள ஏழு தமிழ் பிரதேச செயலங்களிலும் குழுக்களை அமைத்து திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட 44 பாடசாலைகளில் கல்வி பயிலும் புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு தலா இரண்டு செயலட்டைகள் விகிதம் வழங்கி வைத்தது.
நிகழ்வில் பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் பாடசாலை அதிபர்கள் செயலட்டைகளை பெற்றுக்கொண்டனர்.




