பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி

வி.சுகிர்தகுமார்
பொற்புறா வந்த காவியத்துடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்தில் கடந்த 31ஆம் திகதி வாஸ்து சாந்தியுடன் கிரியைகள் ஆரம்பமாகி குறிப்பிட்ட மக்கள் பங்கேற்புடன் இடம்பெற்று வந்தன.
அம்மனின் உற்சவம் கிரியைகள் கடந்த 01 ஆம் திகதி இடம்பெற்ற அம்மனின் திருக்கதவு திறக்கும் நிகழ்வுடனும் 04ஆம் திகதி இடம்பெறும் கால்யாணக்கால் நடும் சடங்குடனும் நேற்றிரவு 05 ஆம் திகதி இடம்பெற்ற திருக்குளிர்த்தி சடங்கு இன்று 06ஆம் திகதி இடம்பெறும் ஐயனார், வைரவர், நாகேஸ்வரர் சடங்குடன் இனிது நிறைவுறவுள்ளது.
ஆலய வண்ணக்கர் க.கார்த்திகேசு தலைமையில் வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகையுடன் இடம்பெறும் திருக்குளிர்த்தி இவ்வருடம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை மற்றும் ஊரடங்கு காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் வருகையுடன் இடம்பெற்றது.
அம்மனுக்கான பொங்கல் ஆரம்பிக்கப்பட்டதனை தொடர்ந்து சிலம்பொலி, உடுக்கை ஒலி, மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா எனும் ஒலியுடன் அம்மனவள் எழுந்தருளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் அம்மனவளுக்கு பக்தர்களால் குளிர்ந்தருளப்பட்டு வாழிபாடப்பட்டதன் பின்னர் கருவறையில் மீண்டும் அமர்ந்து கொண்டாள்.
இறுதியாக பூசகர்களினால் திருக்குளிர்த்தி பாடப்பட்டதனை தொடர்ந்து அம்மனுக்கு பூச்சொரியப்பட்டதுடன் அடியவர்களுக்கு திருவருட்பிரசாதமும் வழங்கப்பட்டது.
.ஆலய தலைவர் க.கார்த்திகேசு தலைமையில் நடைபெற்ற வழிபாட்டுக்கிரியைகளை ஆலய பிரதம பூசகர் கு.ரவீந்திரநாதன்; தலைமையிலான பூசகர்கள் நடாத்தி வைத்தனர்.
இதேநேரம் கொரோனா அச்சம் காரணமாக குறிப்பிட்ட மக்கள் பங்கேற்புடன் வழிபாடுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.





