ஆலையடிவேம்பு தில்லையாற்று பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்கள் இன்று விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது.

வி.சுகிர்தகுமார்
தில்லையாற்றின் கரையோரப்பகுதியில் நீருள் புதைக்கப்பட்டிருந்த வெடி பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டது.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே குறித்த இடத்திற்கு சென்ற மருதமுனை முகாம் விசேட அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் வெடிபொருட்கள் நீருள் இருப்பதை உறுதிப்படுத்தினர்.
பின்னர் வெடிபொருட்களை செயலிழக்கச் செய்யும் அம்பாரை விசேட அதிரடிப்படையினருக்கு தகவலை வழங்கினர். இதனை இடுத்து அங்கு வருகை தந்த வெடிபொருட்களை செயலிழக்கச் செய்யும் அம்பாரை விசேட அதிரடிப்படையினர் வெடிபொருட்களை பாதுகாப்பாக கைப்பற்றினர்.
குறித்த வெடி பொருட்கள் ஒரு சில வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்டிருக்கலாம் என விசேட அதிரடிப்படையினர் சந்தேகம் வெளியிட்டனர்.;.
கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களில் ஆர்பிஜி; குண்டுகள் கிளைமோர் உட்பட 43 வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்பவ இடத்திற்கு அக்கரைப்பற்று பொலிசார் மற்றும் அக்கரைப்பற்று இராணுவ முகாம் அதிகாரிகள் உட்பட பலர் வருகை தந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.



