சிவில் சமூகக் கூட்டமைப்பினால் சிறுவர் பாதுகாப்பு மற்றும் முதியோர் பராமரிப்பு இல்லங்களிற்கான சுகாதாரப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு.

வி.சுகிர்தகுமார்
இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்தில் உள்ள சிறுவர் பாதுகாப்பு மற்றும் முதியோர் பராமரிப்பு இல்லங்களிற்கான சுகாதாரப் பொருட்களை வழங்கி வருவதுடன் சிறுவர் இல்லங்களை கண்காணித்தல் மற்றும் பாதுகாத்தல் நடவடிக்கையினை மனித எழுச்சி நிறுவனமான எச்இஓ மற்றும் யுஎஸ்எயிட் நிறுவனத்தின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அம்மன் மகளிர் இல்லம் மற்றும் விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் சுகாதார மற்றும் சுத்தப்படுத்தல் பொருட்களை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கொவிட் 19 பதிற்செயற்பாட்டிற்கான சிவில் சமூக கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் வி.பரமசிங்கம் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண சிறுவர் நன்நடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்கள ஆணையாளர் திருமதி றிஸ்வாணி றிபாத் சிறுவர் நன்நடத்தை மாவட்ட உத்தியோகத்தர் யு.எல்.அஸாறுடீன், மனித எழுச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் கே.நிகால் அகமட் ஆகியோர் கலந்து கொண்டு சுகாதார மற்றும் சுத்தம் செய்தலுக்கான பொருட்களை வழங்கி வைத்தனர்.
இதேநேரம் அம்பாரை மாவட்டத்திலுள்ள 06 இல்லங்களுக்கும் நிபந்தனையின் அடிப்படையில் சுகாதார மற்றும் சுத்தம் செய்தலுக்கான பொருட்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



