இலஞ்சஊழல் குற்றச்சாட்டில் கைதான செயலாளர் மற்றும் திட்டமிட்டல் பணிப்பாளர், முழுவிபரம்..!

அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சப்ரிகம வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்ள ஒப்பந்த வேலைகளை பெற்றுக்கொடுப்பதற்காக 60 இலட்சம் ரூபா பெறுமதியான 3 வீதிகளின் புனரமைப்பு பணியை ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்குவதற்காக இவர்கள் ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து 3 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரியிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அடைந்த ஒப்பந்தக்காரர்கள் இலஞ்ச ஒழிப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தனர்
இதனை அடுத்து கோரப்பட்ட பணத்தொகையை ஒப்பந்தக்காரர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முனைந்தபோது கொழும்பில் இருந்து சென்ற இலஞ்ச ஒழிப்பு பிரிவினரினால் இலஞ்சஊழல் குற்றச்சாட்டில் சம்பவ இடத்தில் வைத்து இருவரும் நேற்று(28) நண்பகல் 12.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைதான பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் எதிர்வரும் ஜீன் 10 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம் ஹம்ஸா உத்தரவிட்டுள்ளார்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நேற்று(28) மாலை நீதிமன்றத்திற்கு கொண்டுவந்தபோதே நீதிபதி இவ் உத்தரவை பிறப்பித்தார்.
இவ் விடையம் தொடர்பில் மேலதிக விசாரணைக்களை கொழும்பு நீதவான் நீதிமன்றலில் விசாரிப்பதற்காக ஒப்புதல் அடிப்படையில் வழக்கு கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளது.