வாழ்வியல்

முடி உதிர்வு, வழுக்கையைத் தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

20 வருடங்களுக்கு முன்பு வரை 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் கூட கற்றையான கூந்தலை கொண்டு நடமாடி வந்தார்கள். வெகு சிலர் மட்டுமே இலேசான வழுக்கையோடு இருந்தார்கள். அதுவும் தலையின் நடுப்பகுதியில் இலேசான வழுக்கை இருந்தாலும் சுற்றிலும் முடிகள் அடர்த்தியாக இருந்து வழுக்கையை இயன்றவரை மறைத்திருந்தது.

அவர்கள் வழியில் வந்த இன்றைய தலைமுறையினர் இளவயதில் வழுக்கையை கொண்டிருப்பது சாதாரணமாகிவிட்டது. வாழ்க்கை முறையும், உணவு முறையும், அதிகப்படியான மன அழுத்தமும் கூடவே சுற்றுப்புற மாசும் சேர்ந்து சருமத்தையும் கூந்தலையும் பாதிக்கிறது. முடிவிழுவதன் அறிகுறி இருந்தால் உரிய பராமரிப்பு செய்து வழுக்கை விழாமல் தடுக்கலாம், என்ன செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.

​முடி உதிர்வும் வழுக்கையும்

samayam tamil

தலைப்பகுதிகளில் இருக்கும் முடிகள் புரத இழைகளால் ஆனது.ஃபாலிக்கிள் எனப்படும் முடிக்குழிக்குள் இருந்து வரும் சிறு துவாரங்கள் தான் முடிகளுக்கு உறுதியை தரக்கூடியது. இந்த துவாரங்கள் அதிகம் குறுகும் போது முடி வளர்வது தடைபடுகிறது.

மரபணுக்கள், ஸ்டீராய்டு மாத்திரைகள், தூக்கமின்மை, நீண்ட நேரம் விழித்திருப்பது, தலையை சுத்தமாக வைக்காதது, தலைக்கு எண்ணெய் வைக்காமல், எண்ணெய் குளியலும் செய்யாமல் சுற்றுவது, மாசு படிவது, உடலில் ஊட்டச்சத்து குறைவது என்று பல காரணங்கள் முடி உதிர்வையும் பிறகு வழுக்கையையும் உண்டாக்கிவிடும் என்று சொல்லலாம். வழுக்கை வருவதை உணர்த்தும் அறிகுறிகளை அறிந்துகொண்டு ஆரம்பத்திலேயே அதை தவிர்த்துவிடலாம்.

​நிபுணரின் ஆலோசனை

samayam tamil

முடி உதிர்வும் வழுக்கைக்கான அறிகுறியையும் ஆரம்பத்தில் கண்டறிந்தால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நிபுணரை அணுகுவது தான். அடர்த்தியாக இருந்த முடியில் மெலிவை கண்டதும், முடி உதிர்வோடு தலையின் முன்பக்கத்தில் இலேசான வழுக்கைக்கு அறிகுறியாக இருந்தால் அதை தடுத்து நிறுத்த ஆலோசனை கேளுங்கள்.

ஆரம்பகட்டத்திலேயே உங்களுக்கு முடி மாற்று அறுவை சிகிச்சை, பிஆர்பி, ஊசி மூலம் முடிகளை ஒட்டவைத்தல் போன்றவற்றை செய்யமாட்டார்கள். இயற்கை வழியில் முடியை வளர்க்க ஆலோசனை சொல்வார்கள். சற்று பராமரிப்பும் அவர்களது வழிகாட்டுதலையும் முறையாக செய்தாலே வழுக்கையிலிருந்து தப்பித்துகொள்ள முடியும்.

​உணவில் கவனம்

samayam tamil

உடல் ஆரோக்கியம் கெடுவதற்கு எப்படி உடலில் ஊட்டச்சத்து பற்றாக்குறையாக இருக்கிறதோ அதே போன்று முடி வளர்ச்சியிலும் ஊட்டச்சத்துகள் தேவைப்படுகிறது. தேவையான அளவு புரதங்களும் ஊட்டச்சத்துகளும் கூட ஆரோக்கியமானா முடி வளர்சியை ஊக்குவிக்கின்றன.

உணவில் வைட்டமின் ஏ, சி. டி இரும்புச்சத்து நிறைந்தவை இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள். இந்த குறைபாடு இருந்தாலும் முடி வளர்ச்சியில் தாமதம் உண்டாகும். இந்த ஊட்டசத்துகள் தொடர்ந்து பற்றாக்குறையில் இருக்கும் போது அவை முடி உதிர்வை வேகமாக்கி விரைவில் வழுக்கையை உண்டாக்கிவிடும்.

மாத்திரைகள்

samayam tamil

அதிகப்படியான குறைபாடு இருந்தால் உணவின் மூலம் அதை நிரப்புவது கடினம். அதை ஈடு செய்ய மாத்திரைகள் எடுத்துகொள்ளலாம். முக்கியமாக ஜிங்க், பயோட்டின், கால்சியம், வைட்டமின் டி, ஒமேகா 3 நிறைந்த மாத்திரைகள் வழுக்கையை தவிர்க்க உதவும் என்றாலும் கூடுதலாக கூந்தலுக்கும் ஆரோக்கியம் அளிக்ககூடும்.

ஆனால் இங்கு ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க மாத்திரைகள் எடுத்துகொள்வதாக இருந்தால் அதுகுறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. சுயமாக நீங்களாக மாத்திரைகள் எடுத்துகொள்வதை தவிர்க்க வேண்டும்.

​வெளிபராமரிப்பு அதிகம் வேண்டாம்

samayam tamil

வழுக்கை தலையில் முடி வளரும் என்று சொல்லகூடிய வெளி பொருள்களை வாங்கி வாங்கி மாற்றி மாற்றி பயன்படுத்துவதன் மூலம் ஏற்கனவே இழந்த முடியை காட்டிலும் கூடுதலாக முடி இழப்பை உணர்வீர்கள். அப்படி நீங்கள் பயன்படுத்தும் பொருள் எதுவாக இருந்தாலும் அதை பயன்படுத்துவதற்கு முன்பு அது குறித்த விவரங்களையும் முழுவதும் தெரிந்துகொண்டு அது பாதிப்பை உண்டாக்காது என்பதை அறிந்த பிறகு பயன்படுத்துங்கள்.

​மன அழுத்தம்

samayam tamil

முடி உதிர்வுக்கும் மன அழுத்தத்துக்கும் என்ன காரணம் என்று கேட்கலாம். மன அழுத்தம் இருந்தால் உடலில் இருக்கும் ஹார்மொன்கள் வளர்ச்சி சுழற்சியில் பாதிப்பை உண்டாக்கும். தகுந்த உடற்பயிற்சி, சத்தான உணவு போன்றவை மன அழுத்தத்தை குறைக்கும்.

முடி உதிர்தல் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருந்தால் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவாலும் இவை அதிகரிக்கலாம். அதனால் ஷாம்புவை மாற்றி பாருங்கள். அடுத்த சில வாரங்களில் இவை முடி உதிர்தலை கட்டுபடுத்திவிடக்கூடும். இந்த சிறிய விஷயங்களை ஃபாலோ செய்தாலே முடி உதிர்வையும் வழுக்கையின்றி வளமான கூந்தலையும் பெற முயற்சிக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker