வாழ்வியல்

வெற்றிலையை கொண்டு கூந்தலையும் சுத்தம் செய்யலாம், பேனையும் விரட்டி அடிக்கலாம்!

 

கூந்தலை சுத்தமாக வைத்திருந்தாலே கூந்தல் எந்த பிரச்சனையுமில்லாமல் அடர்த்தியாக அழகாய் வளரும்.வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டும் அழகு படுத்தி கொள்ளலாம் என்பது தெரிந்த விஷயம். ஆனால் எந்த பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், மூலிகை பொருள்கள், பால் பொருள்கள் இவையெல்லாம் தாண்டி வெற்றிலையை கொண்டும் சருமத்திலும் கூந்தலிலும் பயன்படுத்தி அழகை இயற்கையாக பெறலாம். வெற்றிலை மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பதால் இதை பச்சை தங்கம் என்றும் அழைக்கிறார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் வெற்றிலை உடல் மற்றும் அழகு சார்ந்த நன்மைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இவை கூந்தலுக்கு செய்யும் நன்மை குறித்து தெரிந்துகொள்வோம்.

 

​முடி உதிர்வுக்கு

 

கொத்து கொத்தாக முடி உதிர்வு பிரச்சனையை சந்திப்பவர்கள் அதை தீர்க்க இருக்கும் அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். ஆனாலும் முடி உதிர்தல் பிரச்சனை முழுமையாக தீராமல் இருக்கும். இவர்கள் வெற்றிலையை முயற்சி செய்யலாம்.

வெற்றிலை-10

நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

வெற்றிலையை எடுத்து மைய அரைக்க வேண்டும். கூந்தலின் அளவுக்கேற்ப வேண்டிய அளவு எடுத்துகொள்ள வேண்டும். இதை அரைத்து நல்லெண்ணெயுடன் சேர்த்து நன்றாக கலந்து கூந்தலின் ஸ்கால்ப் பகுதி முதல் வேரிலிருந்து நுனி வரை தடவ வேண்டும். பிறகு ஒரு மணி நேரம் கழித்து கூந்தலை ஷாம்பு கொண்டு அலசி வெந்நீரில் நனைத்த டவலால் கூந்தலை 15 நிமிடங்கள் இறுக்கி கட்டவும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முடி உதிர்வு பிரச்சனை படிப்படியாக குறையும்.

​முடி நீளமாக வளர

 

முடி வளர்ச்சி குறைவாக இருக்கிறதே என்று நினைப்பவர்கள் மூலிகை எண்ணெயில் வெற்றிலை சேர்த்து பயன்படுத்தலாம்.

தேங்காயெண்ணெய் – 1 கப்,

நல்லெண்ணெய் – கால் கப்,

வெற்றிலை -15 இலைகள்,

துளசி இலைகள் – கைப்பிடி அளவு,

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு,

மருதாணி – ஒரு கைப்பிடி அளவு (தேவையெனில்)

அடுப்பை மிதமான தீயில் வைத்து அகலமான பாத்திரத்தில் நீர் ஊற்றி வையுங்கள். சிறிய இரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் இரண்டையும் ஊற்றி அகலமான பாத்திரத்தின் நடுவில் வைத்து சூடேற்றுங்கள்.

 

இலைகளை சுத்தம் செய்து நறுக்கி அப்படியே எண்ணெயில் சேர்த்து காய்சுங்கள். சில நிமிடங்களில் எண்ணெயின் நிறம் மாறும். இப்போது எண்ணெயை எடுத்து ஆறவைத்து வடிகட்டி தினமும் தலைக்கு தடவி வந்தால் முடி வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

எண்ணெய் காய்ச்சாமல் பயன்படுத்த விரும்பினால் இரும்பு வானலியில் எண்ணெயில் இலைகளை போட்டு தினமும் வெயிலில் வைத்தால் 4 நாட்களில் எண்ணெயின் நிறம் மாறும். பிறகு அதை வடிகட்டி பயன்படுத்தலாம்.

​பொடுகும் பேனும்

கூந்தல் நல்ல போஷாக்குடன் இருந்தாலும் பேன் மற்றும் பொடுகு தொந்தரவால் முடி அடர்த்தி குறைந்து இருக்கும். உதிர்வும் அழுக்கும் படர்ந்திருக்கும். பேனையும் விரட்டி முடியையும் காக்க விரும்புபவர்கள் இதை செய்யலாம்.

வெற்றிலை – 10 இலைகள்

வேப்பிலை – சிறிதளவு

படிகாரத்தூள் – சிறிதளவு ( பேன் அதிகம் இருந்தால்)

இரண்டையும் மைய அரைத்து தலையில் பேஸ்ட் போல் தடவி கொள்ளவேண்டும். அதற்கு முன்பு கூந்தலை சுத்தமாக சீவி சிக்கில்லாமல் வைக்க வேண்டும். பிறகு ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். தலையை அலசியதும் படிகாரத்தூளை மிதமான வெந்நீரில் கலந்து அந்த நீரை பொறுமையாக தலை முடி முழுக்க படும்படி அலச வேண்டும். குறிப்பாக ஸ்கால்ப் பகுதியில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை பயன்படுத்தலாம். இப்படி செய்தாலே பேனோடு பொடுகும் ஓடிவிடும். கூந்தலும் பொலிவாகும்.

​கூந்தல் சுத்தம்

 

அழுக்கும், தூசும் அதிகப்படியாக சேரும் போது பொடுகு பிரச்சனையும் அதிகரிக்கும். என்பதால் எப்போதும் கூந்தலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வாரத்திற்க்கு இரண்டு முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும். பெண்கள் வெள்ளிதோறும் தலையில் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் உச்சந்தலையில் உள்ள உஷ்ணம் குறைந்து உடலை குளிர்ச்சியாக வைக்கும். எப்போதும் கூந்தலை சிக்கில்லாமல் வைத்திருப்பதும் கூட கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். ஷாம்புக்களையும் அவ்வபோது மாற்றி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதை பின்பற்றினாலே கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker