அக்கரைப்பற்று கிழக்கு விவசாயப்போதனாசிரியர் பிரிவின் கீழ் சௌபாக்கியா’ வீட்டுத்தோட்ட வேலைத்திட்டம்

வி.சுகிர்தகுமார்
‘சௌபாக்கியா’ எனும் 10 இலட்சம் வீட்டுத்தோட்டங்களை அமைப்போம் எனும் தொனிபொருளில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தேசிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைவாக அக்கரைப்பற்று கிழக்கு விவசாயப்போதனாசிரியர் பிரிவின் கீழ் உள்ள வீட்டுத்தோட்ட செய்கையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் விதைப் பொதிகள்; வழங்கும் நிகழ்வு இன்று (22) அக்கரைப்பற்று கிழக்கு விவசாய திணைக்கள காரியாலயத்தில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று கிழக்கு விவசாய நிலைய பொறுப்பதிகாரி விவசாயப்போதனாசிரியர் எம்.எஸ்.எம்.நிப்றாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நெல் பாடவிதான உத்தியோகத்தர் ஏ.ஜ.ஏ. பெரோஸ், விவசாயப்போதானசிரியர் எஸ்.நர்மதன், தொழிநுட்ப உதவியாளர் ரி.தக்சியா பிரியதர்சினி உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது வீட்டுத்தோட்ட செய்கையாளர்களுக்கான அறிவுரைகள் மற்றும் விதைப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் நாட்டின் அசாதாரண சூழ்நிலையில் விவசாயிகளை முன்னேற்றும் முகமாக வயல் நிலங்களின் வரம்புகளில் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான பயிர் விதைகளும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.