அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பகுதிகளில் அமைதியான முறையில் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள்

வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பகுதிகளில் மிகவும் அமைதியான முறையில் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றது.
இதேநேரம் ஆலயங்கள் தோறும் அமைதியான முறையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயம், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயங்களிலும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இதில் குருமார் மற்றும் பூஜை உபயகாரர்கள் மாத்திரம் கலந்து கொண்டதையும் பிரார்த்தனையில் ஈடுபட்டதையும் அவதானிக்க முடிந்தது.
இதன்போது கருத்து தெரிவித்த ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.தவேந்திரசர்மா அவர்கள் நாட்டில் தற்போது இருக்கின்ற கொரோனா அச்சறுத்தல் நீங்க வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து வழிபாடுகளை மேற்கொண்டதாக கூறினார்.
மேலும் இதற்காக உழைத்துவரும் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு படையினர் சுகாதாரத்துறையினரின் அர்ப்பணிப்பான சேவையை மேற்கொள்வதாக கூறினார்.
இதேநேரம் ஊரடங்கு காலத்தில் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களை மதித்து மக்கள் செயற்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.


