பிரதேச செயலாளரின் அனுமதி பெற்றதன் பின்னர் நிவாணரப்பணி இடம்பெற வேண்டும் :பிரதேச செயலாளர் கே.லவநாதன்

வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மகத்தான நிவாரணப்பணியை முன்னெடுக்கும் அனைத்து தரப்பினருக்கும் தமது நன்றியை தெரிவிப்பதாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் காலத்தில் நிவாரணப்பணியை முன்னெடுக்கும் தனிநபர் உள்ளிட்ட சமூக அமைப்புக்கள் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் பிரதேச செயலகத்தின் அனுமதி பெற்றதன் பின்னரே வழங்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதேச செயலாளரின் அனுமதி பெற்றதன் பின்னர் கிராம உத்தியோகத்தர்கள் வழங்கும் முன்னுரிமை பட்டியல் அடிப்படையிலேயே நிவாணரப்பணி இடம்பெற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதனை மீறி செயற்படுகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும் வழங்கப்படும் நிவாரணப்பொதியானது அத்தியாவசியப்பொருட்கள் அடங்கிய சராசரி 1000 ரூபா பெறுமதியானதாக இருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
குறித்த செயற்பாடுகள் மூலம் இரண்டைக் கொடுப்பனவுகளை தவிர்ப்பதுடன் நிவாரணப் வழங்கப்படாத மக்களுக்கும் நிவாரணம் வழங்கும் சந்தர்ப்பம் உருவாக்கப்படும் என்றும் நிவாரணப்பொதியின் பெறுமதியை சமப்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு சில பிரதேசங்களுக்கு அதிகமான நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் சில பிரதேசங்களுக்கு இதுவரையில் நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளதையும் நிவராணப்பணியாளர்களிடம் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் கூறினர்.