நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகாரணமாக பாதிப்படைந்து இருக்கின்ற ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட கிராமமக்கள்.

கொரோன வைரஸ் பாதிப்பினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, மக்களின் பாதுகாப்புக்கருதி அண்மையில் அரசாங்கத்தினால் முன்னெடுத்துவரும் ஆவர்த்தன ஊரடங்குச்சட்டத்தினால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள தினசரி கூலிவேலை செய்யும் மக்கள் பாதிப்புற்றநிலையில் காணப்படுகின்றனர். இதன் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நெட்கோட் வீதி, கனகரெட்ணம் வீதி பழைய சாய்ராம் வீதி, மற்றும் புளியம்பத்தை கிராமம், மகாசக்தி கிராமம் போன்ற பிரதேசங்களில் கணிசமான அளவு தினசரி கூலி வேலை செய்வபர்களும் வறுமை கோட்டிற்கு உட்பட்ட மக்கள் அதிகம் பாதிப்புற்று வருகின்றனர்.
இன் நிலையில் குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள கிராமங்களுக்கு எமது ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவினர் சென்று அவர்களின் கஷ்ரங்களை கேட்டு அறிந்துகொண்டனர்.
இதன் அடிப்படையில் தொடர் ஊரடங்கு சட்டத்தினால் தம்மால் தொழிலுக்கு போகமுடியாத துயரநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்களது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வது மிகுந்த சிரமமாக உள்ளதாகவும், பொதுவாக போக்குவரத்து வசதி இல்லாத எங்களுக்கு இக்கால கட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மிகுந்த சிரமத்தை எதிர்கொள்வதாகவும், பொருட்கள் கொள்வனவு செய்வதற்க்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் தொலைதூரம் செல்லவேண்டி இருப்பதாகவும் தெரிவித்தனர்.இதுவரை காலமும் எந்த அமைப்பினாலும் உலர் உணவுகள், நிவாரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்று தத்தமது நிலைப்பாட்டை எடுத்து கூறியிருந்தனர்.
ஆகவே இதன் அடிப்படையில் இவர்களின் நிலைமைகளை புரிந்துகொண்டு எமது பிரதேசங்களில் தன் உயிரை பணயம் வைத்து உலர் உணவுகள் வழங்கிவருகின்ற அமைப்புகள் , நல்நெஞ்சம் படைத்த புலம்பெயர் மனிதர்கள், மற்றும் தொண்டர் அமைப்புக்கள் இவர்களையும் கருத்தில் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றனர்.