உலகம்

பொது இடங்களில் ஒரு மீற்றர் இடைவெளிவிட்டு நிற்காதோருக்கு S$10,000 ( சுமார் 13 லட்சம் ரூபா ) அபராதம்!

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்

சிங்கப்பூரில் பொது இடங்களில் ஒரு மீட்டர் தூரத்துக்கு மக்கள் பரஸ்பரம் ஒருவரிடமிருந்து ஒருவர் விலகி இருக்கவில்லையெனில், S$10,000 ( சுமார் 13 லட்சம் ரூபா ) அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு அதிரடியாக அறிவித்துள்ளது.

 

 

மலேசியா, சிங்கப்பூர் நாடுகளிலும் கொரோனா நோய் தொற்று வேகமாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மலேசியாவில் 26 பேர் கொரோனாவால் இதுவரை உயிரிழந்துள்ளனர் . 2,160க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

இதேபோல் சிங்கப்பூரிலும் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். 730க்கும் அதிமானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இந்த நாடுகள் தீவிரமாக அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றன.

சிங்கப்பூரில் அலுவலகங்கள், பாடசாலைகளை தவிர பிற இடங்களில் 10 பேருக்கு அதிகமாக ஒன்று கூடக்கூடாது, பொது இடங்களில் அனைவரும் 1 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைத்து நிகழ்ச்சிகளிலும் இருக்கைகள் 1 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட வேண்டும்.

இத்தகைய பாதுகாப்பு இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு S$10,000 அபராதம் விதிக்கப்படும் அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் அல்லது இரு தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நடைமுறை இன்று முதல் சிங்கப்பூர் நாடு முழுவதும் அமுலுக்கு வந்துள்ளது.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker