கோரோனாவால் ஏற்பட்ட நிலைமை: உலகக் கிண்ணத் தொடரில் வாய்ப்பை இழந்தது சீனா!

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமா உலக நாடுகள் சீனாவிக்குப் பயணத்தடை விதித்துள்ளன. இதன்காரணமா அவுஸ்ரேலியாவின் மெல்பேர்னில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பை சீனா இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவுஸ்ரேலியாவின் ஜிம்னாஸ்டிக் தலைமை நிர்வாக அதிகாரி கிட்டி சில்லர் தனது அறிக்கையில், “சீன ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கம் மற்றும் அதன் தலைவரைத் தொடர்பு கொண்டுள்ளேன். அவர்களின் பிரதிநிதிகள் அனைவரும் நலமாக உள்ளனர். மேலும் நோய்த்தொற்றின் அறிகுறிகள் அவர்களிடம் அறியப்படவில்லை.
இருந்த போதிலும், அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் பயணக் கட்டுப்பாடுகளை நாம் அனைவரும் மதிக்க வேண்டும்” எனத் தெரவித்துள்ளார்.
உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றும் தகுதி பெற்ற 12 சீன வீரர்களில் ஜாங் செங்லாங் என்பவர் நான்கு முறை உலகச் சம்பியனானவர். இவர் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்கள் அணிக்கு தங்கம் மற்றும் ரியோ விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் ரோக்கியோவில் நடைபெறவுள்ள நிலையில் சீன வீரர்களின் பங்களிப்பு தொடர்பாக அச்சம் எழுந்துள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டிகளில் தடை ஏற்படாது என ஒலிம்பிக் நிர்வாகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.