ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமைகள் உதவி உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் சுமந்திரன்!

ஜெனிவாவுக்குச் சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் உதவி உயர்ஸ்தானிகரைச் சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றநிலையில், இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள், சர்வதேச அரசியல் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் உறுப்பு நாடுகள் மற்றும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகள் அலுவலகத்தோடு கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஜெனிவாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் இதன் முதற் கட்டமாகவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உதவி உயர்ஸ்தானிகரைச் சந்தித்து அவர் கலந்துரையாடியுள்ளார் என்று கூறப்படுகின்றது.