கோளாவில் பெருநாவலர் கனிஸ்ட வித்தியாலய திறானய்வு இல்ல விளையாட்டுப்போட்டி

(வி.சுகிர்தகுமார்)
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று கோளாவில் பெருநாவலர் கனிஸ்ட வித்தியாலய திறானய்வு இல்ல விளையாட்டு போட்டி நேற்று (14) மாலை நடைபெற்றது.
மகாவித்தியாலயத்தின் அதிபர் வெ.கனகரெத்தினம் தலைமையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மைதானத்தில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டியின் நிகழ்வுகளில் விசேட அதிதிகளாக திருக்கோவில் வலய இணைப்பாளர் திருமதி இராமகிருஸ்ணன் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் பிகே. சிவசர்மா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு கணேசன் குருக்கள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.அருள்ராஜா பிரதேச செயலக கணக்காளர் கே.கேசசன் ஆலய தலைவர் கே.நாகலிங்கம் அண்ணா இளைஞர் கழகத்தினர் உள்ளிட்ட அதிபர்கள் அரச அதிகாரிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அணிநடை குழுவினரின் இசையோடு வரவேற்க்கப்பட்ட அதிதிகள் தேசிய கொடியேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டதுடன் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதேநேரம் கனிஷ்ட மாணவர்களின் வித்தியாசமான போட்டி நிகழ்வுகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
தொடர்ந்து மூன்று இல்லத்தினையும் சேர்ந்த கனிஷ்ட பிரிவு மாணவர்களினால் முற்றிலும் புதிய யுத்திகளுடன் காண்பிக்கப்பட்ட மூவகையான உடற்பயிற்சி கண்காட்ச்சியும் வினோத உடைப்போட்டியும் அழகான முறையில் அலங்கரிக்கப்பட்ட இல்லங்களின் சோடனையும் வெகுவாக அனைவரது கவனத்தை ஈர்த்ததுடன் பாராட்டினiயும் பெற்றுக்கொண்டது.
இதேநேரம் இல்லங்களின் நிலை தொடர்பில் முடிவுகள் அறிவிக்கும் முன் மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து நடனமொன்றியையும் வழங்கி அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தினர்.
இறுதியாக சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட சேரர் இல்லத்திற்கும் முறையே சோழர் பாண்டியன் இல்லங்களுக்குமான வெற்றிக்கிண்ணங்களும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான நினைவுச்சின்னங்களையும் அதிதிகள் வழங்கி வைத்தனர்.