ஆலையடிவேம்பு

திருநாவுக்கரசு வித்தியாலய திறானய்வு இல்ல விளையாட்டுப்போட்டி-சம்பியனாக சகானா இல்லம்

(வி.சுகிர்தகுமார்)

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய திறானய்வு இல்ல விளையாட்டுப்போட்டி திங்கள்கிழமை(10) மாலை நடைபெற்றது.

மகாவித்தியாலயத்தின் அதிபர்  எஸ் சுரேஸ் ஸ்ரீபன்சன் தலைமையில் பாடாசலை  மைதானத்தில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டியின் நிகழ்வுகளில் அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக திருக்கோவில் வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சிறிதரன் ஆசிரியர்வள நிலைய முகாமையாளர் எஸ்.சுதாகரன் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார  வைத்திய அதிகாரி குணாளினி சிவராஜ்  பிரதேச சபை உறுப்பினர் சு.கஜந்தன் ஸ்ரீ முருகன் ஆலய தலைவர் ஆர்.ஜெகநாதன்  பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் சி.கனகரெத்தினம் உள்ளிட்ட  அதிபர்கள் அரச அதிகாரிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வான்ட் வாத்திய குழுவினரின் இசையோடு வரவேற்க்கப்பட்ட அதிதிகள் தேசிய கொடியேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டதுடன் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதேநேரம் கனிஷ்ட மாணவர்களின்  வரவேற்பு நடனம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன் அணி வகுப்பு நடைபெற்றது.  அதிதிகள் அணிநடை மரியாதையினை ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து கனிஷ்ட பிரிவு மாணவர்களினால் முற்றிலும் புதிய யுத்திகளுடன் காண்பிக்கப்பட்ட உடற்பயிற்சி கண்காட்ச்சி வெகுவாக அனைவரது கவனத்தை ஈர்த்ததுடன் பாராட்டினையும் பெற்றுக்கொண்டது.

நிகழ்வில் பாடசாலையின் உடற்பயிற்சி ஆசிரியராக கடமையாற்றி விளையாட்டுத்துறையில் பாடசாலை மாணவர்களின் உயர்ச்சிக்கு பாடுபட்டுழைத்துவரும் ஆசிரியர் அக்கீல் பாடசாலை அபிவிருத்தி குழவினரால் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இறுதியாக 281 புள்ளியினை பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட சகானா இல்லத்திற்கும் முறையே 251 புள்ளியினை பெற்ற சிந்து  231 புள்ளியினை பெற்ற பைரவி இல்லங்களுக்குமான வெற்றிக்கிண்ணங்களும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான நினைவுச்சின்னங்களையும் அதிதிகள் வழங்கி வைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker