உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 1354 பேர் பாதிப்பு!

உயிர்களை காவுக் கொண்டுவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு, இதுவரை உலகம் முழுவதும் 1354 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவை தவிர்த்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, அவுஸ்ரேலியா, நேபாளம், வியட்நாம், ஹொங்கொங், மாகூகு, மலேசியா போன்ற நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், ஹொங்கொங்கை சேர்ந்த ஐவர், மாகூகுவை சேர்ந்த இருவர், தாய்வானை சேர்ந்த மூவர், ஜப்பானை சேர்ந்த இருவர், தாய்லாந்தை சேர்ந்த ஐவர், தென்கொரியாவை சேர்ந்த இருவர், அமெரிக்காவை சேர்ந்த இருவர், அவுஸ்ரேலியாவை சேர்ந்த ஒருவர், பிரான்ஸை சேர்ந்த மூவர், மலேசியாவை சேர்ந்த மூவர், சிங்கப்பூரை சேர்ந்த மூவர், நேபாளத்தை சேர்ந்த ஒருவர், வியாட்நாளை சேர்ந்த ஒருவர் அடங்குகின்றனர்.
உலகம் முழுவதும் மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலும் பலரும் இலக்காகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், இந்த கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உலகநாடுகள் தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றன.
இன்றைய இதுவரையான நிலவரப்படி, கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு, 41பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சீனா முழுவதும் 1287 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு இல்லை என்று நிம்மதி பெரு மூச்சு விட்ட நிலையில், பிரான்சில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த மாதம் முதன்முதலில் இந்த பாதிப்பு குறித்து தகவல் வெளிவந்ததிலிருந்து வுகானில் இருந்து 2,000 பேர் பிரித்தானியாவுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உட்பட்ட ஒருவரை தனிமைப்படுத்தாவிட்டால், அந்த நோய் தொற்று அவரை சுற்றி உள்ள 14 பேருக்கு பரவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.