இலங்கை
ஒரு கிலோகிராம் நெல்லை 50 ரூபாயிற்கு கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!

பெரும்போகத்தில் ஒரு கிலோகிராம் நெல்லை 50 ரூபாயிற்கு கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கமைய அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.
இதனடிப்படையில், ஈரலிப்பான நெல் ஒரு கிலோகிராமின் விலை 45 ரூபாயாகும்.
அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தை மாவட்ட செயலாளர்கள், அரசாங்க அதிபர்கள் மற்றும் நெல் சந்தைப்படுத்தும் சபையின் மூலம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.