இலங்கையின் புதிய வீதி வரைபடம் வெளியீடு

இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட வீதி வரைபடம் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என இலங்கை நில அளவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்மைய புதிய வீதி வரைபடம் எதிர்வரும் 29ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக அத்திணைக்களத்தின் தலைமை அதிகாரி எஸ்.எச்.பீ.பீ.சங்கக்கார தெரிவித்துள்ளார்.
6 மாத காலத்திற்கு பின்னர் இவ்வாறு புதிய வீதி வரைபடத்தை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய வீதி வரைபடத்தில் அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான தகவல்கள், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீதிகள் தொடர்பான தகவல்கள், வைத்தியசாலை, பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட தகவல்களும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைவாக புதிய வீதி வரைபடம் வெளியிடப்படுவதன் மூலம் நாட்டுக்கும் சுற்றுலாப்பயணத்துக்காக வருவோருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் எஸ்.எச்.பீ.பீ.சங்கக்கார மேலும் தெரிவித்துள்ளார்.


