இலங்கை
		
	
	
சிறையில் தன்னைக் காணவந்த நண்பனிடம் ரஞ்சன் முக்கிய கோரிக்கை

தனது தொலைபேசி உரையாடல்களைப் பயன்படுத்தி ஏனையோரின் குடும்ப வாழ்க்கையைச் சிதைக்க வேண்டாமென நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க, ஊடகங்களுக்கு இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த தொலைபேசி உரையாடல்களை தனது சொந்தத் தேவைக்காகவே வைத்திருந்ததாகவும் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தனக்குத் தகவல் கொடுத்துள்ள எவரையும் துன்புறுத்த வேண்டாமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரஞ்சனைப் பார்க்கச் சென்ற அவரது நண்பரிடம் இந்தக் கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.
 
				 
					


