ஹரி – மேகனின் எதிர்காலம் குறித்து பிரதமர் ஜோன்சன் நம்பிக்கை

இளவரசர் ஹரி – மேகன் ஆகியோரின் எதிர்கால வகிபாகம் தொடர்பாக அரச குடும்பம் தீர்மானிக்கும் எனத் தான் நம்பிக்கை கொள்வதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

ஹரி மற்றும் மேகன் தம்பதி அரச குடும்பத்தின் முன்னணி வகிபாகத்தில் இருந்து விலகவுள்ளதாக கடந்த புதன்கிழமை அறிவிப்பு விடுத்திருந்தனர்.
அரச குடும்பத்தினர் இந்த விடயத்தினை இலகுவாகத் தீர்த்துக்கொள்வார்கள் என்று தான் நம்புவதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பிபிசியின் காலைநேர நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது குறிப்பிட்டார்.
ஹரி மற்றும் மேகனின் பாதுகாப்பிற்கு யார் பணம் செலுத்துகிறார்கள் என்பது குறித்து மேலும் பேச்சுவார்த்தை தேவை என்று கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கூறியுள்ள நிலையில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஹரி – மேகன் தம்பதியினர் கனடாவில் வசிப்பது குறித்த திட்டங்களின் நிதி மற்றும் நடைமுறை தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது என்று கனேடியப் பிரதமர் கூறியுள்ளார்.



