சிறுபான்மை கட்சியின் ஆதரவின்றி ஜனாதிபதி உருவாக முடியாது – சுமந்திரன்

சிறுபான்மை கட்சியின் ஆதரவின்றி ஜனாதிபதி ஒருவர் உருவாக முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள உடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அந்த நிகழ்வில் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பேச்சுவார்த்தைக்கு எமது தலைவர் இரா.சம்பந்தனிடம் அழைப்பு விடுத்துள்ளார். திகதி வழங்கப்பட்டால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு செல்லுவோம்.
வடக்க மாகாணத்திற்கான புதிய ஆளுநருக்கு முழுமையான ஆதரவை வழங்கி அவருடன் சேவையாற்ற தயாராகவுள்ளோம்.
இரா.சம்பந்தன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளபோதிலும் தேசியப் பட்டியலில் அவரை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரவுள்ளோம்” நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.