இலங்கை
தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவன் நானே – கருணா!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முக்கிய பங்கை ஆற்றியவன் நான் என முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஆனால் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இருப்பவர்களின் பதவி ஆசையாலும் பண ஆசையாலும் அதன் கொள்கை இல்லாத அரசியல் என்ற நிலையில் அவர்களின் நடவடிக்கை சென்றுகொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.