சமூக சிற்பிகள் அமைப்பின் சேவை வழங்குனர்களுடனான ஒருங்கிணைப்பு 02வது கலந்துரையாடல்….

சமூக சிற்பிகள் அமைப்பானது அம்பாறை மாவட்டத்தில் 2015ம் ஆண்டியில் இருந்து பெண்கள் சிறுவர்கள் தொடர்பான உதவிகளையும், செயற்திட்டங்களையும் செயற்பாடுகள் உளநல தொடர்பில் இலவச சட்ட மனிதஉரிமை வழங்கிவருகின்றது.
குறித்த அமைப்பின் ஆற்றுப்படுத்தல் மற்றும் சேவைகளை மேலும் விருத்தி செய்து கொள்ளும் வகையில் ஏனைய அரச, மற்றும் சமூக ஆர்வலர்களின் பங்கேற்புடனான கலந்துரையாடல் நிகழ்வு சமூக சிற்பிகள் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் N.நிஷாந்தி தலைமையில் நேற்றய தினம் (12) காலை 10.30 மணியளவில் அக்கரைப்பற்று 8/3 சமூக சிற்பிகள் அமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படுகின்ற 5,000 ரூபாய் வவுச்சர் முறையாக கையாளப்படுகிறதா? தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதற்கான சார்ந்தப்பங்கள் காணப்படுகிறதா மற்றும் பெண்கள் பொலிஸ் நிலையங்களுக்கு சேவையை பெற்றுக்கொள்ள செல்லும்போது கண்ணியமான முறையில் சேவையை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை எவ்வாறாக இருக்கிறது. என்பது போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது.



