அக்கரைப்பற்று, கோளாவில் பகுதியில் நிதி நிறுவனம் என தெரிவித்து பல லட்சம் பணம் மோசடி செய்த நபர்: பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸில் முறைப்பாடு.

அக்கரைப்பற்று, கோளாவில் பகுதியில் சாகாமம் பிரதான வீதியில் நிதி நிறுவனம் என ஒரு அலுவலகம் ஒன்றினை நடத்திவந்ததுடன் அதன் மூலகமாக மக்களுக்கு கடன் (loan) தருவதாக தெரிவித்து முன்கூட்டியே மக்களிடம் இருந்து பணத்தினை பெற்று நபர் ஒருவர் ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் இன்றைய தினம் (17) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறைந்த வட்டியில் மீள செலுத்தும் கடன் (loan) தருவதாகவும் அதற்கு நீங்கள் முன்கூட்டியே குறித்த ஒரு பணத்தொகையினை தரவேண்டும் அதன் பின்னர் ஒரு சில நாட்கள் கழித்து உங்களுக்கு எங்கள் நிறுவனத்தால் அதிகளவு தொகை கடன் தொகை தரப்படும் என தெரிவித்து பலரிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பணத்தொகையினை வாங்கிக்கொண்டதாகவும்.
பல மாதங்கள் கடந்தும் வழங்கிய வாக்குறுதிக்கமைய கடன் (loan) வழங்கவில்லை எனவும் வழங்கிய முன் பணத்தொகையையாவது மீள வழங்கவில்லை என தெரிவித்து பாதிக்கப்பட்ட மக்கள் பொலிஸ் முறைப்பாடு செய்திருக்கின்றார்கள்.
குறித்த நபர் முறைப்பாட்டின் அடிப்படையில் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
– மக்கள் விழிப்புணர்வுக்காக இந்த பதிவு –



