
பெயர் மற்றும் உற்பத்தியாளரின் விபரங்கள் குறிப்பிடப்படாத கிரீம் வகைகளை விற்பனை செய்த விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரன நேற்று புதன்கிழமை (10) உத்தரவிட்டுள்ளார்.
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவைளப்பில் சந்தேக நபரான விற்பனை நிலையத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 11 புறக்கோட்டையில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தியாளரின் விபரங்கள் , காலாவதி திகதி மற்றும் பெயர் குறிப்பிடப்படாத கிரீம் வகைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும்