விளையாட்டு
இலங்கை தொடருக்கான சிம்பாப்வே அணி அறிவிப்பு!

இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட அணியை சிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த அணியின் தலைவராக கிரெய்க் எர்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.
விக்கெட் காப்பளரும், துடுப்பாட்ட வீரருமான டெய்லர் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் ரிச்சர்ட் ந்கரவா காயத்திலிருந்து திரும்பி வந்துள்ளார்.
சிம்பாப்வேயின் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாத நான்கு வீரர்களும் அணியில் உள்ளனர் – கிளைவ் மடாண்டே, டோனி முன்யோங்கா, பிராட் எவன்ஸ் மற்றும் ஒரு புதிய வேகப்பந்து வீச்சாளர் எர்னஸ்ட் மசுகு.
ஒருநாள் போட்டிகளில் எதிர்வரும் ஆகஸ்ட் 29 மற்றும் 31 ஆகிய திகதிகளில் ஹராரே ஸ்போர்ட்ஸ் கழகத்தில் நடைபெறும்.