ஜனாதிபதி தேர்தலில் ஏற்படப்போகும் விடயத்தை ஒரு மாதத்தின் பின்னர் கூறிய ரணில்

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைவார் என தான் முன்னரே அஞ்சியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அகவர் கூறகையில், “இந்த ஜனாதிபதி தேர்தலின்போது, நான்கு விதமான கருத்துக் கணிப்புக்கள் நடத்தப்பட்டன. இந்த நான்கு கருத்துக் கணிப்புக்களிலும் எமது ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டார்.
இதுதொடர்பாக நாம் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவிடமும் கூறியிருந்தேன். இந்தத் தேர்தலில் சற்று அவதானத்துடன் செயற்படுமாறு அவரிடம் தெரிவித்திருந்தேன். இறுதியில் நாம் அஞ்சியதுபோன்று இடம்பெற்றுள்ளது.
ஆனால், நாம் இறந்த காலத்தையிட்டு என்றும் கவலையடையப் போவதில்லை. நாம் அடுத்ததாக பொதுத் தேர்தலொன்றுக்கு முகம் கொடுக்கவுள்ளோம். எதிர்கால செயற்பாடுகள்தான் முக்கியமானதாகும். ஜனாதிபதி தேர்தலில் நாம் தோல்வியடைந்தவுடன், சிலர் எமக்கு எதிர்க்காலம் இல்லாமல் போய்விட்டதாகக் கூறுகிறார்கள்.



