ஆலையடிவேம்பு
Trending
அக்கரைப்பற்று, விவேகானந்தா வித்தியாலயத்தின் அதிபராக K.ஜனார்த்தனன் கடமைகளை பொறுப்பேற்றார்….

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட அக்கரைப்பற்று கமு/திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தின் அதிபராக K.ஜனார்த்தனன் இன்றைய தினம் (23) கடமைகளை பொறுப்பேற்றார்.
இதன் போது ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழுவினர் என்பவர்களினால் புதிய அதிபரை வரவேற்கும் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது.
இவ் நிகழ்வை ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான கே.கமலமோகனதாசன் கலந்து சிறப்பித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.