ஆலையடிவேம்பு
Trending

ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர்,பிரதி தவிசாளர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் விசேட சந்திப்பு…..

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் தர்மதாச ஆரியதாச மற்றும் பிரதி தவிசாளர் கணேசபிள்ளை ரகுபதி ஆகியோர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி W.D.A.G.விமலதாச(OIC) அவர்களுடன் விசேட சந்திப்பொன்றை நேற்றயதினம் (22) மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது ஆலையடிவேம்பு பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் பிரதான வீதிகள், உள்ளக வீதிகளில் பாதசாரிகளுக்கு விபத்துக்களை ஏற்படுத்தும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தல் மற்றும் ஒலிபெருக்கியில் அறிவித்தல் தொடர்பாக அனுமதி வழங்கல்.ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் பாடசாலை ஆரம்பிக்கும், முடிவுறும் நேரங்களில் வீதிகளில் வேகமாக செல்லும் வாகனங்கள் தொடர்பிலும் மாணவர்களுக்கு வீதிகளில் ஏற்படும் இடையூறுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாகவும் அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு வருமானத்தை ஈட்டும் வழிமுறைகளில் ஒன்றாக சாகாம வீதி, உள்ளக வீதிகளில் போக்குவரத்து பொலிசாரினால் பிடிக்கப்படும் வாகனங்களுக்கு ” தண்டப்பணம் எழுதும் பற்றுச்சீட்டில் (தடகொல) எழுதும் போது “ஆலையடிவேம்பு பிரதேசசபை” என குறிப்பிடும் படியும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன்போது அக்கரைப்பற்று பொலிஸ் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் தந்தநாராயண(ASP) அவர்களுடன் கலந்துரையாடியதுடன் எதிர்வரும் 25ம் திகதிக்கு பின்னர் மேற்கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை கடந்த (09) ம் திகதி ஆலையடிவேம்பு பிரதேசசபையின் முதலாவது கன்னி அமர்வு இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் முதலாவது சந்திப்பும் உத்தியோக பூர்வமான முதற்கட்ட வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker