இலங்கை
Trending

இந்தியப் பிரதமரைச் சந்தித்த தமிழ் அரசியல் பிரதிநிதிகள்!

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 7 பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் ”இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி தனது X தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில் ”இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும் எனவும், பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்களான திரு இரா. சம்பந்தன் மற்றும் திரு மாவை சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் தான் அனுதாபம் தெரிவிப்பதாகவும், அவர்கள் இருவருமே தனிப்பட்ட ரீதியில் தனக்கு நன்கு தெரிந்தவர்கள் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இச்சந்திப்பின் மூலம், ”ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது எனவும், தனது விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் தமிழர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker