இலங்கை
Trending

ஆடைகளை மாத்திரம் நம்பியிருக்க முடியாது, அமெரிக்க சந்தை முன்னர் போல காணப்படாது – இந்தியாவுடன் எக்டா உடன்படிக்கையை இறுதி செய்யுங்கள்-ரணில்விக்கிரமசிங்க வேண்டுகோள் !

ஆடைகளை மாத்திரம் நம்பியிருக்க முடியாது, அமெரிக்க சந்தை முன்னர் போல காணப்படாது – இந்தியாவுடன் எக்டா உடன்படிக்கையை அரசாங்கம் இறுதி செய்யவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்

இந்திய ஊடகத்திற்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை அமெரிக்காவின் புதிய வரிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை இறுதி செய்வது அவசியம்.

சிங்கப்பூர் தாய்லாந்துடன் செய்துகொண்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செயற்படுத்த ஆரம்பிக்கவேண்டும்,அதேவேளை நாடு ஆர்சிஈபியின் அங்கத்துவத்தை தொடரவேண்டும்.

எட்கா உடன்படிக்கையை இறுதி செய்யவேண்டும்,2025க்கு முன்னர் அதனை இறுதி செய்யவேண்டும் என்பதே எனது எண்ணம்.நாங்கள் அதனை முன்னெடுக்கவேண்டும்.

நாங்கள் அமெரிக்காவையும் ஏனைய நாடுகளையும் நம்பியிருந்தோம்,ஆனால் அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகள் எவ்வாறு உள்ளன என்பதை நீங்கள் பார்க்கலாம்,அமெரிக்க சந்தைகள் முன்னர் போல திறந்தவையாக காணப்படாது.

ஐரோப்பாவுடன் என்ன நடக்கும் என்பது தெரியாது,இதன் காரணமாக எட்கா உடன்படிக்கையை முதலில் பூர்த்தி செய்யவேண்டும்,இந்த வருடம் கைச்சாத்திடவேண்டும்.

புதிய வர்த்தக கொள்கை அவசியம்,ஏற்கனவே உள்ளதை கைவிடாமல் புதிய திசைகள் குறித்து ஆராயவேண்டும்,புதிய பொருட்கள் அவசியம் ஆடைகளை மாத்திரம் நம்பியிருக்க முடியாது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker