ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் சிரமதானம்…

கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்த நிலையில் விவேகானந்தா வித்தியாலயத்தில் சுற்றுச்சூழல் பகுதி சிரமதானம் செய்யப்பட வேண்டிய தேவைப்பாடு காணப்பட்ட நிலையில்.
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் இன்று (27) வெள்ளிக்கிழமை காலை 7.௦௦ மணியளவில் விவேகானந்தா வித்தியாலயத்தின் சுற்றுச்சூழல் பகுதியில் சிரமதான பணி நேர்த்தியானதாக முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சிரமதான நிகழ்வின் மூலம் அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயத்தின் சுற்றுச்சூழல் மிகவும் தூய்மையானதாக காணப்படுகிறது. இதற்காக ஆலையடிவேம்பு சமுக நல அமைப்பினருக்கு பாடசாலை சமூகம் சார்பாக மனமாந்த நன்றிகளை அதிபர் தெரிவித்துக்கொள்கின்றார்.