ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் சிரமதானம்: பிரதேச பொது மக்களுக்கும் அழைப்பு…

கடந்த நாட்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்த நிலையில் பனங்காடு பிரதேச வைத்தியசாலை சுற்றுச்சூழல் பகுதியினையும் சிரமதானம் செய்யப்பட வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்ற நிலையில்.
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் எதிர்வரும் (13) வெள்ளிக்கிழமை காலை 6.௦௦ மணியளவில் பனங்காடு பிரதேச வைத்தியசாலை சுற்றுச்சூழல் பகுதியில் மாபெரும் சிரமதான பணியை முன்னெடுக்க உள்ளனர்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் சிரமதான பணிகளுக்கு ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்கள் பங்களிப்புக்களை வழங்குமாறு ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர்அழைப்பு விடுத்துள்ளார்கள்.
இவ் சிரமதான பணியில் இணைந்து கொள்ளவிரும்புபவர்கள் (13) வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.