இலங்கை

மன்னார் மாவட்டத்தில் இரு பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியது இணைந்த கரங்கள்….

திருக்கேதீஸ்வர இந்து சமய தமிழ் கலவன் பாடசாலை மற்றும் மினுக்கன் அரசினர் முஸ்லீம் பாடசாலை ஆகிய இரு பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் 45 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர். திரு. பி.சே. தட்குருஸ் அவர்களின் தலைமையில் (18) இன்று இடம்பெற்றது.

“எழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” எனும் தொனிப்பொருளில் இணைந்த கரங்கள் அமைப்பானது மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை பல கஸ்ர பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக இணைந்த கரங்கள் அமைப்பானது உதவியினை வழங்கி வருகின்றது.

மேலும் இப் பாடசாலையானது கடந்த காலங்களில் யுத்ததித்தினால் பாதிப்படைந்த பாடசாலையாகும் இலங்கையில் இனமதம் மொழி பாராமல் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் மேலதிக கல்வி செயற்பாட்டிற்கான நிதி உதவியினை வழங்கி வருகின்றது.

மேலும் இன் நிகழ்வில் மன்னார் மாவட்ட வலயக் கல்வி அலுவலகத்தில் ஆசிரிய வான்மை விருத்தி முகாமையாளர் சோமஸ் பெரேறா அவர்களும், இரு பாடசாலையின் ஆசிரியர்கள், இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான, காந்தன், சுரேஸ், விவேக் மற்றும் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பாடசாலைக்கு செல்வதற்க்கு தேவையான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker