கண்ணகி வித்தியாலய மாணவர்களின் மாதிரிச் சந்தை!

-ஹரிஷ்-
ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட கமு/திகோ/கண்ணகி வித்தியாலய மாணவர்களின் இணைப் பாடவிதான செயற்பாடுகளின் ஒன்றான மாணவர் மாதிரிச்சந்தை இன்று (17) பாடசாலையில் நடைபெற்றது.
தரம் 03 மாணவர்கள் தமது கணித அறிவையும், சமூகத்தில் தொடர்பாடல் விருத்தி, வியாபார நுனுக்கங்கள், என்பவற்றை பாடசாலையிலேயே கற்றுக் கொடுக்கும் பயிற்சியாக குறித்த பாடசாலை மாதிரி சந்தை நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த சந்தையில் மாணவர்கள் தமது வீட்டுத்தோட்டத்தில் விழைந்த காய்கறிகள், தேங்காய், கீரை வகைகள், பழங்கள், கைப்பணிப் பொருட்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் தமது விற்பனைப் பொருட்களை வியாபாரம் செய்த அதேவேளை கிராம மக்களும் சிறுவர்களிடம் பணம் கொடுத்து பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.
பாடசாலை மாணவர்களின் குறித்த செயற்பாடுகளுக்கு பாடசாலையின் அதிபர் த.இராசநாதன் மற்றும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கூடுதல் ஆதரவை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.