ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று வாச்சிக்குடா ஸ்ரீராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேய தேவஸ்தானத்தின் முதலாவது வருசாபிசேக தின அஸ்டோத்திர(108) சங்காபிசேகம்….

அக்கரைப்பற்று வாச்சிக்குடா ஸ்ரீராம பக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில் கடந்த வருடம் கும்பாபிசேகம் இடம்பெற்று 01ஆவது வருசாபிசேக தின அஸ்டோத்திர(108) சங்காபிசேக நிகழ்வானது அபரபச துதியை அட்டமி திதியும், உத்தரட்டாதி நட்சத்திரமும் கூடிய சுபவேளையில் இன்று (29) சனிக்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
காயத்திரி சித்தர் டாக்டர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் மானசீக ஆசிர்வாதத்தோடு ராம்ஜி சுவாமிகளின் ஆசிர்வாதத்துடன் இடம்பெற்ற முதலாவது வருசாபிசேக தின அஸ்டோத்திர(108) சங்காபிசேக கிரியைகள் யாவற்றையும் வித்தியாசாதகர் கிரியா காலா பவளமணி வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ புண்ணியகிருஸ்ண குமாரக்குருக்கள் மற்றும் ஆலய குரு சிவஸ்ரீ த.குகனேசசர்மா ஆகியோர் நடாத்தினர்.
மேலும் அபிஷேகம், யாகபூஜையை தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.