கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை ஜூன் 30ஆம் திகதி திறப்பு: கதிர்காம யாத்திரை பாதை திறப்பு ஒன்று கூடல் இன்று….

கதிர்காம பாதயாத்திரைக்கான பாதை திறப்பு சம்பந்தமான கலந்துரையாடல் இன்றைய தினம் 07/06/2024 உகந்தை முருகன்ஆலயத்தில் காரைதீவு அன்னதான மண்டபத்தில் லகுகல பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெற்றது.
இன் நிகழ்வில் ஆன்மிக அதிதியாக உகந்தை முருகன் ஆலய பிரதம குரு, பாணமை விகாரையின் விகாராதிபதி ஆகியோரும் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்,
லகுகல, திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, காரைதீவு, கல்முனை ஆகிய பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் வனவிலங்கு அதிகாரி,விசேட அதிரடிப்படையினர், பாணமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பரிசோதகர், சிவில் அமைப்புக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பாதை திறப்பு 30/06/2024 நிறைவு 11/07/2024 என தீர்மானம் அம்பாரை மாவட்ட அராசாங்க அதிபர் மற்றும் மொனறாகலை அரசாங்க அதிபர்களினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.