கோளாவில், பெருநாவலர் வித்தியாலயத்தில் புத்தாக்க கண்காட்சியும் பேண்ட் வாத்தியக்கருவி கையேற்பு நிகழ்வும்….

கோளாவில், பெருநாவலர் வித்தியாலயத்தில் புத்தாக்க கண்காட்சியும் பேண்ட் வாத்தியக்கருவி கையேற்பு நிகழ்வும் இன்று (06) வியாழக்கிழமை பி.ப 3.00 மணியளவில் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் பாடசாலை அதிபர் தேசமாணி ஸ்ரீ.மணிவண்ணன் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது.
நிகழ்வில் அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மரங்கன்றுகள் நடுகை நிகழ்வு இடம்பெற்று அதனை தொடந்து மங்கள விளக்கேற்றல் இறைவணக்கம் மாணவர்களின் கலாச்சார நிகழ்வுகள் அதிபரின் தலைமை உரை அதிதிகள் உரைகள் என்பன இடம்பெற்றதுடன்.
அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலய மாணவன் மதியழகன் மொபிஷ்டனின் புத்தாக்க கண்காட்சியும் அவரால் வரையப்பட்ட ஓவியங்கள் அதிதிகளுக்கு வழங்கும் நிகழ்வும்.
பேண்ட் வாத்தியக்கருவி சவுதி அரேபியாவில் பணிபுரியும் வெ.சிவபாதன் நிதி உதவியில் வாங்கப்பட்டு அவரின் தாயரினால் பாடசாலை நிர்வாகத்தினரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதுடன் இதற்கான நன்றிக் கடிதமும் பாராட்டும் வெ.சிவபாதன் அவர்களின் தாயாருக்கு வருகைதந்த அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் இரா.உதயகுமார் ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் க.கமலமோகனதாஸன் ஆகியவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர் மேலும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.