ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு, வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் அன்னதான மண்டபம் திறந்து வைப்பு…

ஆலையடிவேம்பை சேர்ந்த லண்டனில் வசிக்கும் ஞா.கலாமேகன் சித்திர லேகா குடும்பத்தினரால்
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான சந்நிதியில் அன்னதான மண்டபம் அமைக்கப்பட்டு ஆலய நிர்வாகத்தினரிடம் இன்றைய தினம் (27) சிறப்பு பூஜை நிகழ்வுகளுடன் கையளிக்கப்பட்டது.
ஆலயத்திற்கு அன்னதான மண்டபத்தின் தேவை காணப்பட்டு வந்த நிலையில் ஆலயத்தின் தலைவர் ஜெகநாதன் வேண்டுகோளுக்கிணங்க ஞா.கலாமேகன் சித்திர லேகா குடும்பத்தினரால் 43 லட்சம் ரூபா நிதியில் குறித்த அன்னதான மண்டபம் அமைக்கப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது.
