ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசசபைக்கு உட்பட்ட சின்ன முகத்துவாரம் கடற்கரை பகுதி சிரமதானம்….

ஆலையடிவேம்பு பிரதேசசபைக்கு உட்பட்ட இயற்கை அழகு நிறைந்த சின்னமுகத்துவாரம் கடற்கரை பகுதி இன்றைய தினம் (01) பார்தீபன் அவர்களின் முன்னெடுப்பில் மருது விளையாட்டு கழகம், அக்கரைப்பற்று தமிழ் பற்றளர்களின் சுற்றுப்புறச் சூழல் பசுமைப் புரட்சிக் குழு, சமூக ஆர்வலர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டு சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதியில் இயற்கை அழகை சீர்குழைக்கும் வகையில் காணப்பட்ட குப்பைகள், வெற்றுப் போத்தல்கள் என்பன அகற்றப்பட்டு தூய்மையாக்கப்பட்டது.