மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியது இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள மட்/மமே/நெல்லூர் கலைமகள் வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் வறிய குடும்பங்களுடைய 60 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர். திரு.பா. லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 2024/04/26 இன்று இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பாடசாலை இணைப்பாடவிதான இனணப்பாளர் திரு. சி. கண்ணன், முன்பள்ளி பாடசாலை உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. சு. கணேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஆயித்தியமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் திரு. து. வித்தியானந்தன் அவர்களுடன் இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான, சி.காந்தன், சி.துலக்சன், சனாதானன் ஆகியோர் கலந்து 60 மாணவர்களுக்கான பாடசாலைக்கு செல்வதற்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
“எழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” எனும் தொனிப்பொருளில் இணைந்த கரங்கள் அமைப்பானது மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை பல கஷ்டப் பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு உதவியினை வழங்கி வருகின்றது.