ஆலையடிவேம்பு
ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் (04/05/2024) சனிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணிமுதல் அக்கரைப்பற்று, தர்மரத்ன பாடசாலை விளையாட்டு மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடாத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் சீரற்ற காலநிலை மற்றும் வேறு சில காரணங்களால் திகதிகள் மாற்றப்பட்ட போதிலும் திட்டமிட்டபடி நேர்த்தியான முறையில் எதிர்வரும் (04/05/2024) அன்று நடைபெறும் அத்துடன் அதிஷ்டலாபச் சீட்டிழுப்பும் அன்றைய தினமே நடைபெறும் என்பதை அறியத்தருகிறார்கள்.
