ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் சிரமதானம்….


சிரமதான பணி அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையிலும், அமைப்பின் ஆலோசகர் சி.கனகரெத்தினம் (ஓய்வுபெற்ற பிரதம கணக்காய்வாளர்) அவர்களின் ஆலோசனையிலும் மிகவும் நேர்த்தியான முறையில் சிரமதான பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த சிரமதானத்திற்கான முழுமையான ஒத்துழைப்பை பனங்காடு பிரதேச வைத்தியசாலை நிர்வாகத்தினர் வழங்கியதுடன். அவர்களால் சிரமதானம் மேற்கொண்டவர்களுக்கு தேநீர் ஆகாரம் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த செயற்பாடுகளை பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளர் வைத்தியர் திருமதி.சிவராஜ் குணாளினி அவர்கள் முன்னின்று செயற்படுத்தி இருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.