வெற்றிகரமாக இடம்பெற்ற தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு….

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ளவர்கள் தங்களது கற்கை நெறிகளை எவ்வாறு தெரிவு செய்வது, எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது தொடர்பான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு ”சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் (இலண்டன்) அமைப்பு மற்றும் Alayadivembuweb.lk இணையக்குழுவினர் பூரண ஏற்பாட்டில் ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) பதில் அதிபர் க.ஜயந்தன் தலைமையில் இன்றைய தினம் (20) வெற்றிகரமாக இடம்பெற்றது.
கருத்தரங்கு ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றதுடன். மட்டக்களப்பு தேசிய கல்வியல் கல்லூரியின் பீடாதிபதி T.கணேசரத்னம், மட்டக்களப்பு தேசிய கல்வியல் கல்லூரி விரிவுரையாளர் S.லோகராஜா, கல்வியல் கல்லூரியின் ICT அதிகாரி V.கௌரீஸ்வர்தன் என துறைசார் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு திறன்பட பல தெளிவூட்டல்களுடன் வழிகாட்டல் கருத்தரங்கு இடம்பெற்றது.