ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, செலின்கோ ஆயுள் காப்புறுதி நிறுவனத்தினால் ஆலையடிவேம்பு கல்விக் கோட்ட புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு…..

-கஸ்மிதான்-
ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளின் இருந்து 2023 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று, செலின்கோ ஆயுள் காப்புறுதி நிறுவனத்தினால் இன்றைய தினம் (20) அக்கரைப்பற்று ,ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் செலிங்கோ லைப் நிறுவனத்தின் முகாமையாளர் திரு.சுதன், பிராந்திய இயக்குனர் திரு.வேணுகரன் மற்றும் பாடசாலையின் அதிபர் திரு.க.ஜெயந்தன் அவர்கள் சிறப்பு அதிதிகளாகவும், ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் குறித்த நிகழ்வில் சித்தி பெற்ற மாணவர்களை கொளரவிக்கும் முகமாக அதிதிகளால் வெற்றிகிண்ணம் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.