ஆலையடிவேம்பு
83 O/L batch பழைய மாணவர்களால் ஶ்ரீ ராமகிருஷ்ண மகா வித்தியாலயத்திற்கு துவிச்சக்கர வண்டி தரிப்பிடம் கையளிப்பு….

83 O/L batch பழைய மாணவர்களால் அக்கரைப்பற்று, ஶ்ரீ ராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி தரிப்பிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (06) காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு.நேசராஜா அவர்கள் தலைமையில் இடம்பெற்றதுடன் நாம் ’83’ பொற்கால தொகுதி நண்பர்கள் கலந்துகொண்டு புதிதாக நிர்மாணித்த துவிச்சக்கர வண்டி தரிப்பிடத்தினை வழங்கிவைத்திருந்தனர்.
நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


