அக்கரைப்பற்று, ஶ்ரீ ராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் முன் முகப்பு மதில் “சத்தியம்” அமைப்பினால் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு புதுப்பொலிவுடன்……

“சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஸ்தாபகர் சத்தியமூர்த்தி அவர்களினால் ஆலையடிவேம்பு கோட்டத்திற்கு உட்பட்ட பல பாடசாலைகளுக்கு உதவிகள் பல வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் மாணவர்களின் மகிழ்வான சூழலையும் மனமகிழ்வுடன் கற்பதை ஊக்குவிக்கும் முகமாகவும் பாடசாலைகளுக்கு மதில் சுவர்களில் கல்வி சம்பந்தப்பட்ட அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
அதனில் ஒரு அங்கமாக அக்கரைப்பற்று, ஶ்ரீ ராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி.ரவிலேகா நித்தியானந்தன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க விழிப்புணர்வு ஒவியங்களாலும், மகுட வாக்கியங்களாலும் பாடசாலையின் முன் மதில் அழகுபடுத்தலுக்கு “சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் முழுமையான பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது.
மேற்படி சுவர் ஓவியங்களில் ஒரு சில குறித்த பாடசாலை மாணவர்களினால் வரையப்பட்டது என்பதுடன் குறித்த்த செயற்பாடு தற்போது முழுமையாக்கப்பட்டு பாடசாலையின் சூழல் மிகவும் அழகாக காணப்படுகிறது.
மேலும் பாடசாலையின் தொன்மை வாய்ந்த முன்முகப்பு கோபுரம் என்பவற்றிற்கும் நிறம் தீட்டப்பட்டு தற்போது குறித்த அமைப்பும் புதுப்பொலிவுடன் தோற்றமளிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

