ஆலையடிவேம்பு
கனமழை !!!அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேச வீடுகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் உள்செல்லும் அபாயம்!

பெய்து வரும் அடைமழை காரணமாக அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேசம் பரவலாக வெள்ள நீரினால் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றது மேலும் ஒரு சிலரின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தும் மற்றும் மேலும் சிறிது நேரம் மழை பெய்ந்தால் மக்கள் வீடுகளுக்குள் மழை வெள்ளம் போகக்கூடிய அபாய நிலையும் காணப்படுகின்றது.
தற்போது வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்த மக்கள் தங்கள் உறவினர் வீடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள்.இவ் வானிலை தொடரும் இடத்து மேலும் பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுவதால் மக்கள் பாதுகாப்பான பொதுவான (பாடசாலைகள் போன்ற) இடங்களுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும்.
எவ்வாறு ஏற்படும் மிடத்து தொண்டர் அமைப்புகள் மற்றும் நலன் விரும்பிகள் மக்களுக்கு உதவிகள் வழங்குவதற்கு தயாராக இருங்கள்.